தமிழ் திரைபட வரலாற்றில் முத்திரை பதித்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று.

Update: 2022-11-29 03:37 GMT

1908ல் நாகர்கோயிலில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த என்.எஸ்.கிருஷ்ணன், நான்காம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார்.

நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் சிறுவனாக தனது வாழ்க்கையை தொடங்கி, பின் வில்லுப் பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவக் கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்து,சொந்தமாக நாடகக் நிறுவனத்தையும் நடத்தினார்.

நகைச்சுவை நடிப்பின் மூலம் நவீன, பகுத்தறிவு கருத்துகளை பரப்பி மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

1936ல் சதி லீலாவது படத்தின் மூலம் திரைபடத் துறையில் அறிமுகம் ஆனார். இவரது மனைவி மதுரத்துடன் இணைந்து பல படங்களில் நடித்ததார். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார்.

1949ல் அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் உருவாக் கப்பட்ட நல்ல தம்பி படத்தில் கதாநாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்றார். அதில் அவர் நிகழ்த்திய கிந்தனார் சரித்தர கதாகாலட்சேபம் பெரும் வரவேற்பை பெற்றது

Tags:    

மேலும் செய்திகள்