Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-01-2023) | Morning Headlines | Thanthi TV
ஈரோடு இடைத் தேர்தலில் தீவிர பிரசாரத்தை துவங்கியது, திமுக கூட்டணி...அமைச்சர் முத்துசாமி தலைமையில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பு...
ஈரோடு இடைத் தேர்தல் பணிகளுக்காக காங்கிரஸ் சார்பாக குழு அறிவிப்பு...மோகன் குமாரமங்கலம் தலைமையில் குழுவை அமைத்தார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி...
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு துணிவிருந்தால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடலாமே....தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சவால்....
ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் வேட்பாளரை நிறுத்தி பாஜகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இல்லை....திமுக கூட்டணி வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என அண்ணாமலை பதிலடி...
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்...அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நம்பிக்கை...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக 20 முன்னாள் அமைச்சர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை...சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது...
அதிமுக இணைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பேட்டி...ஒரு பெரிய மனுஷன் சொன்னா கேட்கணும் எனவும் வேண்டுகோள்...
பிரச்னைகளுக்கு தீர்வு காண தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்..சிறுவர்களுக்கான பால புரஸ்கார் விருதுகளை வழங்கி, பிரதமர் மோடி அறிவுரை...
நாளை சென்னை கடற்கரையில் தமிழ்நாடு அரசு சார்பாக குடியரசு தின விழா கொண்டாட்டம்...திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில், தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை...
குடியரசு தினத்தன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும்...பொதுமக்கள் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு அழைப்பு...
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் எகிப்து அதிபர் அல் சிசி, இந்தியா வந்தார்...குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து ராணுவமும் பங்கேற்கிறது...
ஒவ்வொரு மாதத்தின் முதல் வேளை நாளன்று கைத்தறி ஆடையை அணிய வேண்டும்...அரசு ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசு உத்தரவு...
அம்மா சிமெண்ட் வினியோகத்தில் முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்...தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...
ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியுசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்தது, இந்திய அணி...
3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா, சுப்மன் கில் சதம்...நியுசிலாந்து அணியில் கான்வே சதம் அடித்தார்...