காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-11-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-11-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-11-30 00:55 GMT
  • வங்கக்கடலில் உருவான ​ஃபெஞ்சல் புயல் காரைக்கால் -மாமல்லபுரம் இடையே இன்று கரையை கடக்கிறது... புயல் கரையை கடக்கும்போது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை....
  • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்....... புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை....
  • ஃபெஞ்சல் புயல் தீவிர புயலாக கரையை கடக்கும்போது சூறாவளி காற்றுடன் குறுகிய நேரத்தில் பெருமழைக்கு வாய்ப்பு.... 30 முதல் 35 சென்டி மீட்டர் வரை மழை இருக்கும் என்பதால் பாதிப்பும் அதிகம் என கணிப்பு....
  • கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்... சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6ம் எண் மற்றும் காரைக்கால், நாகை துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது...
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை....... விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிப்பு... கும்பகோணம், திருவிடைமருதூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.....
  • சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் கீழ் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு.... சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த அனைத்துத் தேர்வுகளும் தள்ளிவைப்பு..... செங்கல்பட்டில் நடைபெறவிருந்த கூட்டுறவுத்துறை விற்பனையாளர் பணியிடத்திற்கான நேர்முகத்தேர்வும் ஒத்திவைப்பு...
Tags:    

மேலும் செய்திகள்