Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (10.11.2022) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2022-11-10 07:55 GMT

மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக கொங்கு மண்டலம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்.....கோவையில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.

ஆன்லைன் விளையாட்டிற்கான அவசர தடை சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு...அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு, வருகிற16ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநர் தரப்பில் எந்தவித விளக்கமும் கேட்கவில்லை.....20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாகவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்.

அரசின் தவறுகளை கண்டுபிடித்து விடுவதால், ஆளுநரை நீக்க சொல்வதா?...பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை...சென்னையில் மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் அதிகாரிகள் அதிரடி.

கோவையில் உக்கடம், ரத்தினபுரி உள்ளிட்ட 20 இடங்களில் சோதனை...சென்னை மற்றும் கொச்சியில் இருந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை.

சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல்...மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய பட்டியலின் அடிப்படையில், தமிழக காவல்துறையினர் தனியாக நடத்தும் சோதனையில் அடையாளம் காணப்பட்டனர்.

கர்நாடகாவில், காவலர் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை.....காவலர், மனைவி மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தி நகைகள் பறிப்பு.

இமாச்சல பிரதேசத்தில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்.....இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரம்.

மாலத்தீவு தலைநகர் மாலேவில், அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து....9 இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழப்பு.

Tags:    

மேலும் செய்திகள்