"சட்டமன்றத்தில் காமராஜர் பெயரை புறக்கணித்த ஆளுநர்" - நாடார் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழக ஆளுநர் ஆர் என்.ரவிக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டையில், தமிழ்நாடு நாடார் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் எம்எல்ஏவும், பனை வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தில் பெருந்தலைவர் காமராஜர் பெயரை வாசிக்க தவிர்த்ததை கண்டித்து, தமிழ்நாடு நாடார் அமைப்புகளின் கட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எர்ணாவூர் நாராயணன், காமராஜர் பெயரை புறக்கணித்தது குறித்து ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய காமராஜர் பெயரை புறக்கணித்ததால் தமிழகத்தையும் , தமிழக மக்களையும் புறக்கணித்துள்ளார் என அவர் புகார் கூறினார்.