தி. மலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: 7-வது முக்கிய குற்றவாளியை அசாமில் அமுக்கி புடித்த போலீஸ்

Update: 2023-03-16 08:31 GMT
  • திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • கடந்த மாதம் 12ஆம் தேதி நான்கு ஏ டி எம் மையங்களில் 75 லட்சம் ரூபாயை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
  • இந்தசம்பவத்தின் தலைவன் முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத், குதரத்பாஷா, அப்சர்உசேன், மற்றும் நிஜாமுதீன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • இந்த நிலையில் மற்றொரு குற்றவாளி சீராஜூதின் ராஜஸ்தானிலும், ஏழாவது நபராக அரியானா மாநிலத்தை சேர்ந்த வாஹித் என்ற குற்றவாளியை அசாம் மாநிலம் சராய்தியோ மாவட்டம் அருகேயும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
  • அவர்களை திருவண்ணாமலை கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்