அபாய பாதையாகிய ஒரு வழி பாதை.. லாரியில் சிக்கிய 11ம் வகுப்பு மாணவன் -பைக்கில் சென்றபோது விபரீதம்
திருத்தணியில் ஒரு வழிப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். திருத்தணி பெரிய தெரு பகுதியில் வசிப்பவர் பாபுவின் மகன் கார்த்தி.
11-ஆம் வகுப்பு மாணவரான இவர், திருப்பதி பைபாஸ் ரவுண்டான பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, ஒருவழிப்பாதையில் வேகமாக சென்றதால் அவ்வழியாக சென்ற லாரியில் மோதி பலத்த காயமடைந்தார்.
திருத்தணி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லாரி ஓட்டுநர் போலீசில் சரணடைந்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்