திருப்பதியில் இடைத்தரகர்களுக்கு செக்.. தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு - வரும் 1ம் தேதி முதல் அமல்

Update: 2023-02-21 08:09 GMT
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இடைத்தரகர்களுக்கு செக் வைக்கும் விதமாக, பேஸ் ஐடென்டிஃபிகேஷன் டெக்னாலஜி (FACE IDENTIFICATION TECHNOLOGY) பயன்படுத்தப்படவுள்ளது.
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களில் சிலர், இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள், லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்குவது வழக்கம்.
  • இதனை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து தோல்வியடைந்த தேவஸ்தான நிர்வாகம் தற்போது, பேஸ் ஐடென்டிஃபிகேஷன் டெக்னாலஜி (FACE IDENTIFICATION TECHNOLOGY) எனப்படும் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
  • லட்டு பிரசாதம் வாங்குவது, தங்குவதற்காக அறைகளை பெறுவது ஆகியவற்றுக்காக கவுண்டர்களுக்கு செல்பவர்கள், அந்த வாரத்தில் எத்தனை முறை வந்துள்ளார்கள் என்பதை அந்த தொழில்நுட்பம் காட்டி கொடுத்துவிடும். எ
  • னவே இதன்மூலம் இடைத்தரகர்களின் செயல்பாடு தடுக்கப்படும் என கருதப்படுகிறது.
  • வரும் 1 ஆம் தேதி முதல் இந்த தொழில்நுட்பம் சோதனை முறையில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்