திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன முன்பதிவு வரும்18 ஆம் தேதி காலை 9 மணிக்கு துவங்கும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 27ஆம் தேதி முதல் 9 நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுவதால் அந்த நாட்களில் இலவச தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 300 ரூபாய் சிறப்பு டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.