கட்சி மாறிய விவகாரம்....ராணுவ வீரர் மீது திமுகவினர் தாக்குதல் என புகார்
ஜோலார்பேட்டை அருகே கட்சி மாறிய விவகாரத்தில், ராணுவ வீரர் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் காவேரிபட்டு பகுதியில், ஆனந்தன் என்பவரின் தலைமையில், சுமார் 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்துள்ளனர். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ராணுவ வீரரான ஆனந்தனின் மகன் சிலம்பரசனை, ஊராட்சி மன்ற தலைவர் மாலா சேகர் உள்ளிட்ட ஐந்து பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜோலார்பேட்டை காவல்நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர், ஐந்து பேர் மீதும் புகார் அளித்துள்ளனர்.