திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருவறை மேலிருக்கும் தங்க கோபுரத்திற்கு தங்க முலாம் பூசும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆனந்த நிலையம் தங்க கோபுரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தங்க தகடுகள் பதிக்கப்பட்டன... தங்க தகடுகளை அடுத்த மாதம் 22 முதல் 28ம் தேதி வரை பணிகளைத் துவங்க முடிவெடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பதியில் உள்ள கோவிந்த ராஜ சாமி கோயிலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட கோபுரங்களில் தங்க தகடு பதிக்கும் பணி இன்னும் நிறைவு பெறவில்லை என்பதால் சர்வதேச அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகளை விரைந்து முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.