வாக்கிங் சென்றபோது நடந்த பயங்கரம்...ரத்த வெள்ளத்தில் கேபிள் டிவி உரிமையாளர் - திருச்சியில் பரபரப்பு

Update: 2022-11-07 12:40 GMT

வாக்கிங் சென்றபோது நடந்த பயங்கரம்...ரத்த வெள்ளத்தில் கேபிள் டிவி உரிமையாளர் - திருச்சியில் பரபரப்பு

லால்குடி அடுத்த மாந்துறை பகுதியை சேர்ந்த மாதவன் என்பவர், பம்பரம்சுத்தி கிராமத்தில் கேபிள் டிவி உரிமையாளராக இருந்து வந்தார். வழக்கம்போல் மாந்துரை அடுத்த கைலாச நகரில் நடைப்பயிற்சி செய்ய வந்தபோது, அடையாளம் தெரியாத 10க்கும் மேற்பட்டோர் மாதவனை அரிவாளால் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட மாதவன், கிராமத்துக்கு சொந்தமான கோவிலில் முக்கிய பொறுப்பு வகித்து வந்ததாகவும், கோவில் சம்பந்தமான பிரச்சினையின்போது அவருக்கும், எதிர்தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, முன்விரோதம் காரணமாக நடந்த கொலையா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்