திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா - பக்தர்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு முக்கிய அறிவிப்பு

Update: 2022-10-22 05:42 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் நடைபெற உள்ள கந்த சஷ்டி விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். அங்கு கந்த சஷ்டி விழா வரும் 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி ஆறு நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம், 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கான தற்காலிக கொட்டகைகள், குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்