தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மீது தாக்குதல் காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்-உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்
உமன் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், இரவு நேரத்தில் தூங்கிக்கொண்டு இருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பயங்கர வாதிகள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனின் உமன் நகரில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், ஜெலன்ஸ்கி அதனை தெரிவித்துள்ளார்.