உள்பக்கமாக பூட்டி இருந்த வீடு - கதவை உடைத்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் தம்பதி

Update: 2022-10-31 09:31 GMT

உள்பக்கமாக பூட்டி இருந்த வீடு - கதவை உடைத்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் தம்பதி

கோவில்பட்டி அருகே உள்பக்கமாக பூட்டிய வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் தம்பதி இறந்து கிடந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலுப்பையூரணி ஊராட்சி பெருமாள் நகரை சேர்ந்த ராஜபாண்டியும், அவரது மனைவி பரணி செல்வியும் வீட்டுக்குள் இருந்து இரவு வரை வெளியே வராமல் இருந்துள்ளனர். அவர்களது மகன் மனோஜ்குமார் கதவை தட்டியும், கதவு திறக்கப்படாத‌தால், போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது, பரணி செல்வியும், ராஜபாண்டியனும் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த‌து தெரிய வந்த‌து. இதையடுத்து உடல்களை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்