"இதுதான் எங்கள் ராணுவத்தின் பலம்"... உலகுக்கு குறிப்பால் உணர்த்திய இந்தியா..! இணைந்தான் எதிரிகளை அழிக்கும் காப்பான்..!

Update: 2022-12-18 09:37 GMT

மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்வில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி லெப்டினெனட் ஜெனரல் அனில் சவுகான், கடற்படை தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் முன்னிலையில், ஐ.என்.எஸ் மோர்முகா போர்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

முற்றிலுமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் மோர்முகா போர் கப்பல் பி15பி ஏவுகைணையை அழிக்கும் திறன் கொண்டது.

163 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலமும், 7 ஆயிரத்து 400 டன் எடையும் கொண்ட பிரமாண்ட கப்பல், மணிக்கு 53 கிலோ மிட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது.

அதிநவீன ரேடார்களை கொண்டுள்ள இந்த கப்பல், தரை மற்றும் வான்வழி இலக்கை குறி வைத்து தாக்கும் பிரமோஸ் ஏவுகணை தளவாடங்களை கொண்டுள்ளது.

அணு ஆயுதங்கள் மற்றும் ரசாயன விளைவுகளால் பாதிக்கப்படாத வகையில் வடிவமைக்கப்பட்ட மோர்முகா போர் கப்பல், நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கும் ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்களை கொண்டு, இந்தியாவின் பலத்தை கம்பீரமாக எடுத்துரைக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்