- திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர், கர்நாடகாவில் கைது செய்யப்பட்டனர்.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் இருந்து 75 லட்ச ரூபாயை வடமாநில கொள்ளையர்கள், கடந்த 12-ஆம் தேதி கொள்ளை அடித்துச் சென்றனர்.
- இதையடுத்து போலீசார் 9 தனிப்படைகள் அமைத்து, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அவர்களைத் தேடி வந்தனர்.
- அதைத் தொடர்ந்து, ஹரியானாவில் கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் போலீசார் கடந்த 18-ஆம் தேதி கைது செய்தனர்.
- இந்நிலையில், கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய கர்நாடகத்தைச் சேர்ந்த குதரத் பாஷா, அஸ்ஸாமைச் சேர்ந்த அப்சர் உசேன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கோலாரில் கைது செய்து, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
- அவர்கள் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் நீதிபதி உத்தரவிட்டதன் பேரில், வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.