கள்ளக்காதலி பேச மறுத்ததால் ஆத்திரம்... தாய், மகளுக்கு நேர்ந்த சோகம்! கள்ளக்காதலன் வெறிச்செயல்
திருவண்ணாமலையில், தகாத உறவில் ஏற்பட்ட பிரச்சினையில். தாய் மற்றும் மகளை, கள்ளக்காதலன் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த பரிமளா என்பவர், 2 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் உயிரிழந்ததை அடுத்து, காமராஜ் என்பவருடன் பரிமளாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. தாயின் தகாத உறவை அறிந்த பிள்ளைகள், அவரிடம் பேசாமல் இருந்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காமராஜிடம் உடனான உறவை முறித்துள்ளார் பரிமளா. இந்த நிலையில், புதுப்பாளையம் அருகே உள்ள கோயிலுக்கு, தனது 2வது மகளை பரிமளா அழைத்துச் சென்றுள்ளார். இதனை அறிந்த காமராஜ், அரிவாளுடன் பின் தொடர்ந்து சென்று பரிமளாவை தாக்கியதுடன், தாயை காப்பாற்ற வந்த 17 வயது சிறுமியையும் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளார். இதில் தாய் மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், இருவரையும் கொலை செய்துவிட்டு, காமராஜ் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.