திருச்செந்தூர் கோயிலில் தைப்பூச திருவிழா... "இந்த உடைகளை அணிய கூடாது" - காவல்துறை விடுத்த எச்சரிக்கை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூசத் திருவிழவை ஒட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாத யாத்திரையாக கோயிலுக்கு வரும் பக்தர்கள், விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, வலதுபுறமாக நடந்து செல்ல வேண்டும் என்றும், அப்போதுதான், எதிரில் இடது புறமாக வரும் வாகனங்களைப் பார்த்து, பக்தர்கள் தங்களை காத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இறைவழிபாட்டு எண்ணத்துடன் வரும் பக்தர்கள், ஜாதியை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து வரக் கூடாது என்றும், சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வரக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.