"இவையே அரசின் இரு கண்கள்.." முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு| CM Stalin |Vellore
கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கோவில் அறங்காவலரின் இல்லத் திருமண விழாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்...அறங்காவலர் மருதமுத்து - ராணி தம்பதியின் மகள் வெற்றி செல்விக்கும், ஜெய்சங்கர் - கலைவாணி தம்பதியின் மகன் சந்தோஷுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனிடையே, முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடந்த சுயமரியாதை திருமணத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின் இருவரும், தலைமை தாங்கி நடத்தி வைத்தனர். அதேபோல, திமுக நிர்வாகி பாபுவின் இல்ல திருமண விழாவிற்கும் தலைமை தாங்கிய முதல்வர், யோக ரத்னா- விக்னேஷ் ஜோடிக்கு திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு, திமுக நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்.