வாணியம்பாடி அருகே ஆந்திர மாநிலம் குப்பத்தில் ரயிலில் ப்ரேக் ஜாம் ஆகி புகை வந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் குப்பம் ரயில் நிலையம் அருகே சென்றது. அப்போது ரயிலின் கேண்டீன் பெட்டியில் இருந்து புகை வந்துள்ளது.
இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. புகை மூட்டத்தால் அச்சமடைந்த பயணிகள் அலறியடுத்து ஓட்டம் பிடித்தனர்.
தகவலறிந்த ரயில்வேத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
ப்ரேக் சிஸ்டம் ஜாம் ஆனதால் அதிக வெப்பம் ஏற்பட்டு புகை வந்துள்ளதாகவும் வேறு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பயணிகள் நிம்மதியடைந்தனர். 3 மணி நேர தாமதத்திற்கு பின் ரயில் புறப்பட்டு சென்றது.