ஆண்டாள் கோயிலில் பணியிலிருந்த தலைமை காவலர் திடீரென மயங்கியதால் பரபரப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பணியிலிருந்த தலைமை காவலர் மோகன் மயங்கி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டாள் கோவில் புறக்காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் மோகன், திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்த காவலர்கள் மோகனை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குறந்த இரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தலைமை காவலர் மோகனின் உடலை சொந்த ஊரான தைலாபுரத்திற்கு எடுத்துச்சென்றனர். பணியில் இருந்தபோது காவலர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.