"ஆளுநர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை"- VC-க்கள் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி ஆவேசம்
ஆளுநர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது என அமைச்சர் பொன்முடி பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
துணைவேந்தர்கள் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, வருமானம் வரும் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகமே வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், வருமானம் இல்லாதவற்றை அரசு எடுத்துக் கொள்ள வேண்டுமா? என கேள்வி எழுப்பிதாக, உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை இது வரை வெளியிடவில்லை என்றும், விரைந்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ஆளுநர் சொல்வதையெல்லாம் அப்படியே கேட்க வேண்டும் என்ற அவசியம் துணைவேந்தர்களுக்கு இல்லை என்றும், பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் தேதி மட்டும் தான் கேட்க வேண்டும் என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சிறப்பு விருந்தினர் யார் என்பதை துணைவேந்தர்களே முடிவு செய்யலாம் என, துணைவேந்தர்கள் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்ததாகவும், கூறப்படுகிறது. அதே போன்று, யுஜிசி செல்வதையெல்லாம் கேட்க வேண்டும் என்ற தேவை இல்லை என்றும், மாநிலத்தில் என்ன சூழ்நிலை நிலவுகிறதோ அதற்கு ஏற்றார் போல தான் செயல்பட முடியும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.