புதுப்பட்டியில் சிறுத்தை உயிரிழந்த வழக்கு... "என்னை மிரட்டி தான் கையெழுத்து வாங்கினார்கள்" - அலெக்ஸ்பாண்டியன் குற்றச்சாட்டு

Update: 2023-02-23 02:43 GMT
  • தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா கோம்பை புதுப்பட்டியில் சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை வனத்துறையிடமிருந்து மாற்றி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுமாறு முதலமைச்சரின் தனிப்பிரிவில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் என்பவர் மனு அளித்துள்ளார்.
  • ஓபிஎஸ் மகனும், எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு சொந்தமான கோம்பை புதுப்பட்டியில் ஆடு கிடை போட்டிருந்த அலெக்ஸ்பாண்டியனை சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வனத்துறையினர் கைது செய்தனர்.
  • இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அலெக்ஸ் பாண்டியன் 4 வன காவலர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி தன்னிடம் கையெழுத்து வாங்கியதாகவும்,
  • சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தை வனத்துறையினர் உண்மையாக விசாரிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்