தியேட்டரில் கைக்குழந்தை அழுகிறதா? - இனி கவலை வேண்டாம் - திரையரங்கத்தின் அசத்தல் ஐடியா

Update: 2022-12-07 09:40 GMT

கேரளாவில் உள்ள தியேட்டர்களில் அழும் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தியேட்டருக்கு சின்னச்சிறு குழந்தைகளுடன் படம் பார்க்க செல்லும் பெற்றோர் பலரும் பலமுறை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக நேரிடும்.

திடீரென அழ தொடங்கும் குழந்தையை சமாளிக்க வழித்தெரியாமல் போராடும் பெற்றோர், பலமுறை படம் முடிவதற்குள் பாதியிலேயே தியேட்டரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இது போன்ற நிகழ்வு இனியும் தொடராமல் இருக்க கேரளாவில் உள்ள தியேட்டரில் அழும் குழந்தைகளுக்கான பிரத்யேக அறை ஒன்றை கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சவுண்ட் ஃப்ரூப் அறையில் இருந்து கொண்டு, பெற்றோர் கண்ணாடி ஜன்னல் வழியாக படத்தை கண்டு ரசிக்கலாம்.

திருவனந்தபுரம் கைராலி தியேட்டர் காம்பிளக்ஸில் தான் இந்த அழும் அறை அறிமுகமாகியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்