30 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட தியேட்டர்கள் - காஷ்மீரில் மெல்ல திரும்பும் இயல்பு நிலை

Update: 2022-09-20 07:56 GMT

காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக திரையரங்குகளை மீண்டும் திறக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், நகர் லால் சவுக் பகுதியில் இருந்த ரீகல் சினிமா தியேட்டர் மீது 1999-ல் கையெறி குண்டு வீசப்பட்டது. தொடர்ந்து, நீலம், பிராட்வே போன்ற திரையரங்குகளும் மூடப்பட்டன.

தற்போது மக்களின் பொழுது போக்குக்காகவும், தகவல்களை அறிந்து கொள்வதற்காகவும், திறன் மேம்பாட்டுக்காகவும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள திரையரங்குகளை அரசு மீண்டும் திறந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரை படப்பிடிப்புக்கான தளமாக மாற்றவும், சினிமா தயாரிப்புக்குப் பயன்படுத்தவும், திரைப்படங்களை வெளியிடவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்