தகாத முறையில் நடக்க முயன்ற இளைஞரை கட்டி வைத்து குத்தி கொன்ற இளம்பெண்.. தானாகவே போலீஸில் சரண்
தெலங்கானாவின் வரங்கள் மாவட்டத்தின் முலுகு கிராமத்தை சேர்ந்தவர் சீனு. இவர் அதே பகுதியில் உள்ள பெண் ஒருவரின் வீட்டிற்கு மது போதையில் சென்ற நிலையில், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், ஆவேசமடைந்த பெண், கயிறால் இளைஞரை கட்டி வைத்து, வீட்டிலிருந்து கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து, காவல்நிலையத்துக்கு தானாகவே சென்று இளம்பெண் போலீசில் சரணடந்த நிலையில், இளைஞரின் உடலை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், இளம் பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.