FB லைவ்-ல் கழுத்தை அறுத்து தற்கொலை... காரணத்தை போட்டு உடைத்த இளைஞர்

Update: 2022-11-10 06:23 GMT

உத்தரபிரதேசத்தில், காதலி துரோகம் செய்ததை பொறுக்க முடியாத இளைஞர், பேஸ்புக் நேரலையில் வீடியோ எடுத்தபடி, கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.மகாராஜ் கஞ்ச் மாவட்டத்தில் பேஸ்புக் நேரலையில் வீடியோ எடுத்தபடி, இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இளைஞரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான விசாரணையில், காதலித்த பெண்ணிற்கு, அவரது வீட்டில் வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்ததாகவும், அதற்கு காதலியும் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அந்த இளைஞர், பேஸ்புக் நேரலையில் காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரைக் கூறியபடி, கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது காண்போரை வேதனை அடைய வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்