கணவனை இழந்த பெண்ணை பின் தொடர்ந்து தாக்குதல் நடத்திய இளைஞர் - வெளியான பரபரப்பு காட்சிகள்

Update: 2023-06-20 10:30 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பட்டியலின பெண்ணை சாதி ரீதியாக ஒருமையில் பேசி மதுபோதையில் தாக்கியவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.சூளகிரி அடுத்த டி. கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராதா. இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ள நிலையில், கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், மளிகை பொருள்கள் வாங்க கடைக்கு சென்ற ராதாவை, அதே ஊரை சேர்ந்த சுதாகர் என்பவர் மதுபோதையில் சாதி ரீதியாக ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அவரை பின் தொடர்ந்து வீட்டிற்கு வந்த சுதாகர், ராதாவையும், அவரது தந்தையையும் தாக்கி சென்ற நிலையில், இது குறித்தான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இந்நிலையில், புகாரின் அடிப்படையில், இளைஞர் சுதாகர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்