இரு சக்கர வாகனத்தில் நிலைதடுமாறி... லாரி சக்கரங்களுக்கு இடையே விழுந்த இளைஞர்

Update: 2022-08-29 15:07 GMT

மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்ற 22 வயது இளைஞர் மீது டேங்கர் லாரி ஏறியதில், சம்பவ இடத்திலேய இளைஞர் உயிரிழந்தார். கணேசன் ஃபலே என்ற அந்த இளைஞர், திவா-ஆகாசன் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது எதிரில் வந்த டேங்கர் லாரியின் பின்பக்க சக்கரங்கள் அவர் மீது ஏறியது. பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்