லீவு போட்டு வீட்டில் இருந்த இளம்பெண்.. கதவை திறந்ததும் தோழிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஸ்ரீபெரும்புதூரில், இளம்பெண் தூக்கிட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் குடியிருப்பில் தனது தோழிகளுடன் தங்கி, பிரபல செல்போன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். சகதோழிகள் வேலைக்கு சென்றுவிட்டு வீடுதிரும்பிய நிலையில் அறை உள்பக்கமாக பூட்டியும், எவ்வளவு தட்டியும் திறக்கப்படாமலும் இருந்துள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் கதவை உடைக்கவே, இளம்பெண் தூக்கில் தொங்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.'