கலெக்டர் முன் திடீரென தீக்குளிக்க முயன்ற பெண்கள்... கூட்டத்தில் பரபரப்பு
கடலூரில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற மனு நீதி முகாமில், பெண் தூய்மைப் பணியாளர்கள் இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. கடலூர் மாவட்டம் கோ.கொத்தனூர் கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, வரம்பனூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக இருந்து வரும் ராதிகா, மகேஸ்வரி ஆகியோர், தங்களை வேண்டுமென்றே ஊராட்சி மன்றத் தலைவர் பணி நீக்கம் செய்துள்ளதாகவும், அதுகுறித்து பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். அப்போது மனு அளிக்க முடியாததால் விரக்தியடைந்த அவர்கள் இருவரும், தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அங்கிருந்த காவலர்கள், அவர்கள் இருவரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.