நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த வார்டு உறுப்பினருக்கு அடி, உதை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி
செங்கலபட்டில் ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த வார்டு உறுப்பினருக்கு அடி உதை ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேலமையூர் ஊராட்சியில் 9-வார்டுகள் உள்ளன. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வரும் நீலா என்பவருக்கு எதிராக அதே பகுதியைச் சேர்ந்த 4-பேர் தீர்மானத்தில் கையெழுத்து போட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கையெழுத்திட்ட ஜூல்பிகார் என்பவர் மீது, சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.