கட்டுப்பாட்டை இழந்த வேன்... விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சென்றபோது... மாணவனுக்கு நடந்த சோகம்!
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தொண்டு நிறுவனத்திற்கு, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இருந்து 67 மாணவர்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளனர். இந்த நிலையில், வாகனம் கடகனூர் அருகே உள்ள வளைவு சாலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரம் இருந்த கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவன் சாமுவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மற்ற மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில், ஆடு, மாடுகளை ஏற்றிச் செல்வது போல மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்றதால் மாணவர் உயிரழந்ததாகவும், மாணவரின் உயிரிழப்புக்கு கல்லூரி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.