5.6 லட்சம் வீரர்களை இறக்கிய அமெரிக்கா...எதிர்த்த இந்தியா - வியட்நாம் போரில் தோல்வி கண்ட வல்லரசு

Update: 2023-07-11 12:11 GMT

5.6 லட்சம் ராணுவ வீரர்களை நேரடியாக இறக்கிய அமெரிக்கா... அஞ்சாமல் துணிந்து எதிர்த்த இந்தியா - வியட்நாம் போரில் தோல்வி கண்ட வல்லரசு

வியட்நாம் போர் முடிவடைந்து, 20 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் அமெரிக்கா - வியட்நாம் இடையே தூதரக உறவு ஏற்பட்ட தினம் இன்று. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கிறது.

தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாம், 1954ல் பிரான்ஸின்

ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றது. ஆனால் வடக்கு

வியட்நாம் கம்யூனிச ஆட்சியிலும், தெற்கு வியட்நாம் முதலாளித்துவ பாதையிலும் சென்று, இரு நாடுகளாக பிரிந்தன.

சோவியத் ரஷ்யா மற்றும் செஞ்சீனாவின் உதவியோடு, தெற்கு வியட்நாமை கைபற்றி, தன்னுடன் இணைத்துக் கொள்ள வடக்கு வியட்நாம் முயன்றது.

ஆசியாவில் கம்யூனிச பரவலை தடுக்க தெற்கு வியட்நாமிற்கு

அமெரிக்கா ஏராளமான ராணுவ உதவிகளை அளித்தது. 1960களில் தெற்கு வியட்நாமிற்கு ஆதரவாக, அமெரிக்க ராணுவம் நேரடியாக களம் இறங்கியது.

வடக்கு வியட்நாம் மீது அமெரிக்க போர் விமானங்கள் மிகப் பெரிய அளவுக்கு குண்டு வீச்சு தாக்குதல்களை நடத்தின. ரசாயன குண்டுகளையும் வீசியது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் அமெரிக்காவிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

1969ல் 5.6 லட்சம் அமெரிக்க ராணுவ வீரர்கள், வியட்நாமில்

நிலை நிறுத்தப்பட்டு, போர் உச்சமடைந்தது. ஆனால் வடக்கு

வியட்நாமை அமெரிக்காவால் தோற்கடிக்க முடியவில்லை.

இரு தரப்பிலும் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது. பல லட்சம்

அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

1973ல் அமெரிக்கா தனது படைகளை வியட்நாமில் இருந்து

வாபஸ் பெற்றது. 1975ல் தெற்கு வியட்நாமை வடக்கு

வியட்நாம் முழுவதுமாக கைபற்றியது. ஒன்றுபட்ட வியட்நாமில் கம்யூனிச ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து வியட்நாம் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. 1991ல், சோவியத் ஒன்றியம் தகர்ந்து, கம்யூனிச வீழ்ச்சி ஏற்பட்ட பின், அமெரிக்கா, வியட்நாம் இடையே மீண்டும் உறவு மலரத் தொடங்கியது.

அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், 1994ல் வியட்நாம் மீதான பொருளாதார தடைகளை ரத்து செய்தார். 1995இல் இரு நாடுகள் இடையே மீண்டும் தூதரக உறவு ஏற்பட்டது. முதலாளித்துவ பாதைக்கு மாறி வரும் வியட்நாமில், அமெரிக்க நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன.

தற்போது சீனாவின் ஆதிக்க போக்குகளுக்கு எதிராக,

அமெரிக்காவுடன் வியட்நாம் கூட்டணி அமைத்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு, பிறகு வியட்நாம், அமெரிக்கா இடையே

தூதரக உறவுகள் உருவான தினம், 1995, ஜூலை 11. 

Tags:    

மேலும் செய்திகள்