சாவகாசமாக சாலையை கடந்த புலி தேயிலை தோட்டத்தில் ஒய்யாரமாக உலா... இணையத்தில் வைரலாகும் காட்சி
உதகை அருகே, தேயிலை தோட்டத்தில் ஒய்யாரமாக உலா வந்த புலியின் வீடியோ, வைரலாகி வருகிறது.
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம், அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், சோலூர் செல்லும் சாலையில், புலி ஒன்று சாவகாசமாக சாலையை கடந்து, தேயிலை தோட்டத்தில் உலா வந்தது.
இந்த காட்சிகளை, அவ்வழியே காரில் பயணித்த சுற்றுலா பயணிகள், கேமிராவில் பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.