கட்டவிழ்த்து விட்ட ஐகோர்ட்..போராடி கட்டி போட்ட தமிழக அரசு - நடுவே ஆளுநர் ஆடிய கேம்..சின்ன பிளாஸ்பேக்

Update: 2023-04-11 08:09 GMT



ஆன்-லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில், சட்டம் கடந்து வந்த பாதை உங்கள் பார்வைக்கு...


ஆன்-லைன் சூதாட்டங்களால் நேரிடும் உயிரிழப்புகளை தடுக்க, சட்டம் இயற்றுமாறு கோரிக்கை வலுத்த நிலையில், 2021 பிப்ரவரியில் 25 ஆம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது.

இதற்கு எதிராக சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2021 ஆகஸ்ட் 3 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், இச்சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதை ரத்து செய்தது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

மறுபுறம் பணத்தை இழந்து உயிரை மாய்த்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்க, சட்டம் இயற்ற

விளையாட்டில் இருக்கும் பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கையை சமர்பிக்க 2022 ஜூன் 10 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

குழு ஜூன் 27 ஆம் தேதி சட்டம் இயற்றுவது குறித்த ஆய்வு அறிக்கையை சமர்பித்தது.

பரிந்துரை அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை விதிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை தமிழக அரசு இயற்றி, கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி ஆளுநர் ஒப்புதலை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தடையை நிரந்தரமாக்க அக்டோபர் 19 ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டம் 2022 மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அவருடைய அலுவலகத்துக்கு அக்டோபர் 28 ஆம் தேதி மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே அவசரச் சட்டம் நவம்பர் 27 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், நவம்பர் 25 ஆம் தேதி, சட்ட மசோதா குறித்து விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பினார் ஆளுநர். சட்ட முன்வடிவு அரசியலமைப்பு கூறுகளுக்கு உட்பட்டதா? என்ற ஆளுநர் கேள்விக்கு, சட்ட முன்வடிவு அரசியலமைப்பு கூறுகளுக்கு உட்பட்டுதான் இருக்கிறது என உடனடியாக பதில் அளித்தது தமிழக அரசு.

டிசம்பர் 2 ஆம் தேதி ஆளுநரை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆன்லைன் ரம்மி மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கோரிக்கை விடுத்தார்.

ஆனால் இந்த விஷயத்தில் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, மார்ச் 8 ஆம் தேதி மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவைத்தார்.

மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 23 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்-லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில், ஏப்ரல் 10 ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி


Tags:    

மேலும் செய்திகள்