பொட்டு வைத்து சென்றதால் சரமாரியாக தாக்கிய ஆசிரியை..! விரக்தியில் மாணவி விபரீதம் - போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

Update: 2023-07-13 02:57 GMT

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் பள்ளிக்கு பொட்டு வைத்து சென்றதற்காக ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

டெதுல்மாரியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்த மாணவி, பள்ளிக்கு பொட்டு வைத்து சென்றதாகவும், அதனால் சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை மாணவியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்வால் மனமுடைந்த மாணவி, கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய போலீசார் ஆசிரியை மற்றும் பள்ளி முதல்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநே

Tags:    

மேலும் செய்திகள்