"டேங்க் கெப்பாசிட்டியே 60 லி. தான்.. எப்படி 60.970 லி போட்டிங்க..? "பெட்ரோல் பங்க்கில் பரபரப்பு
திண்டுக்கல்லில் உள்ள பெட்ரோல் பங்க்கில், டீசல் நிரப்பியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, வாகன உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் அருகே உள்ள பழனி நான்குவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில், அழகர்சாமி என்பவரது வேனுக்கு டீசல் நிரப்ப ஓட்டுநர் பாண்டி சென்றுள்ளார். அங்கு 60 லிட்டர் 970 மில்லி அளவுக்கு டீசல் போட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டீசல் டேங்க் கொள்ளளவு 60 லிட்டர் என்றும், 60 லிட்டருக்கு மேல் எவ்வாறு டீசல் போடப்பட்டது எனக்கேட்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், ஓட்டுநர், வேனில் இருந்த டீசல் டேங்க்கை கழற்றி டீசலை அளக்க கூறியுள்ளார். பங்க் பணியாளர்கள் வந்து டீசலை அளந்தனர். அப்போது, வாகனத்தில் ஏற்கனவே இருந்த டீசலை காணவில்லை என்று ஓட்டுநர் கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். டீசல் நிரப்பியதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி வாகன உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.