நண்பனை இழந்த சோகம்...பிரிவை தாங்க முடியாமல் பஸ் முன் பாய்ந்த முதியவர்...நெஞ்சை அதிர செய்யும் காட்சி

Update: 2022-11-23 12:48 GMT

திருப்பூரில் நண்பர் உயிரிழந்த சோகத்தில் முதியவர் பேருந்து முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மன்னரை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. 75 வயதான இவர் தினமும், தனது நண்பருடன் நடைப்பயிற்சி சென்று வந்துள்ளார். இந்நிலையில், சுப்பிரமணியின் நண்பர் கடந்த வாரம் மாரடைப்பு ஏற்பட்டுள்ள உயிரிழந்துள்ளார். இதனால், சோகத்தில் இருந்த சுப்பிரமணி வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு சென்ற நிலையில், ஊத்துக்குளி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்