சாட்சி அளித்தவரை மிரட்டிய ரவுடி - நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு | Salem

Update: 2022-12-03 13:53 GMT

சேலத்தில் சாட்சியத்திற்காக அழைத்து வரப்பட்ட நபரை நீதிமன்ற வளாகத்திலேயே ரவுடி ஒருவர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே ஜாகிர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர்.

இவர் சேலம் நீதிமன்றத்திற்கு ரவுடி தீனதாயாளன் வழக்கில் சாட்சி சொல்வதற்காக சென்றுள்ளார்.

அப்போது, சாட்சி அளித்த விட்டு நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த ராஜசேகரை, போலீஸ் பாதுகாப்பில் அழைத்து சென்று கொண்டிருந்த தீனதயாளன் மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜசேகர் போலீசில் புகாரளித்த நிலையில், ரவுடி தீனதயாளன் மீது சாட்சியளித்த நபரை மிரட்டியதாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்