தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வழிப்பறி ஆசாமிகள்... போலீசாரின் தீவிர கண்காணிப்பில் சிக்கிய இருவர்

Update: 2022-11-30 07:36 GMT

கடலூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் பகுதியில், இருசக்கர வாகனங்களில் செல்வோரை நிறுத்தி, செல்போனை வழிப்பறி செய்வதாக புகார்கள் வந்தது.

இதையடுத்து, குமராட்சி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமான வலம்வந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரித்ததில், இரவு நேரங்களில் இருவரும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை அடித்து செல்போனை திருடுவது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்