குண்டும், குழியுமாக காணப்படும் சாலை... குளம் போல் தேங்கி இருக்கும் மழை நீர்
சென்னை நாவலுார் - தாழம்பூர் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ஓஎம்ஆர் சாலை பகுதிகளான நாவலுார், தாழம்பூரில் நான்கு கிலோ மீட்டர் தூரம் வரையிலான சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இதனிடையே, கனமழை பெய்ததால் குண்டும், குழியுமாக இருக்கும் சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். நாவலூரில் இருந்து தாழம்பூர் வரையிலான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.