கால்பந்து மைதானத்தில் வெடித்த கலவரம்..127 பேர் துடி துடித்து பலி-ஆக்ரோஷமாக தாக்கிக்கொண்ட காட்சிகள்
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு ஜாவாவில் நடைபெற்ற போட்டியில், அரீமா அணியும், பெர்செபயா சுரபயா அணியும் மோதின.
இதில், 2க்கு 3 என்ற கோல் கணக்கில் அரீமா அணி தோற்றது. இதை ஏற்க முடியாத அரீமா அணி ரசிகர்கள், மைதானத்திற்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் விரட்டினர்.
இந்த வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.