திடீரென தீப்பிடித்து சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்..! - 5 பேர் உடல்கருகி உயிரிழப்பு
அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள சாலையில், விமானம் விபத்திற்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அம்மாகாணத்தில் உள்ள உலோக உற்பத்தி ஆலையில் சமீபமாக வெடிவிபத்து ஒன்று நிகழ்ந்தது.
இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராய அர்கானாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தனியார் சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவன அதிகாரிகள் 5 பேர் விமானத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு புறப்பட்டனர்.
லிட்டில் ராக் நகரில் இருந்து பறக்கத் துவங்கிய விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
இவ்விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.