மயிலாடுதுறையில் சாலையோரம் மயங்கி கிடந்த முதியவர் மீட்கப்பட்டு சிகிச்சை அளித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று நலம் விசாரித்தார். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சோழசக்கரநல்லூர் பகுதியில் சாலையோரம் மயங்கிய நிலையில் முதியவர் ஒருவர் இருப்பதை பார்த்துள்ளார். உடனே காரில் இருந்து இறங்கி முதியவருக்கு உதவிய ஆட்சியர், 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்ற ஆட்சியர் லலிதா, அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.