இரவில் பஸ்ஸிலிருந்து இறங்கிய முதியவர்... வழிமறித்து செயினை பறித்த கும்பல் - பதற வைக்கும் காட்சிகள்
தென்காசியில் முதியவரிடம் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சுந்தரபாண்டிய புரத்தை சேர்ந்த முதியவர் நரசிம்ம அய்யர். பேருந்தில் இரவு பயணம் செய்த இவர், அதிகாலை நேரத்தில் நடு பல்க் அருகே பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது, முதியவரை வழிமறித்த மூவர் முதியவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடினர். இது தொடர்பான புகாரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தென்காசியை சேர்ந்த அஷ்ரப் அலி , சூர்யா மற்றும் 16 வயதுடைய சிறுவன் ஆகியோரை கைது செய்து நகையை மீட்டுள்ளனர்.