டாஸ்மாக் கடையை மூடும் போது திடீரென வந்த மாஸ்க் போட்ட மர்ம நபர்கள் - அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
கரூரில், அரிவாளைக்காட்டி டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடியில், ஊருக்கு ஒதுக்குபுறமாக டாஸ்மாக் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று இரவு கடையை அடைக்கும் நேரத்தில் மர்மநபர்கள் 5 பேர் வந்துள்ளனர். முகக்கவசம் அணிந்து வந்த அவர்கள் கடையின் சேல்ஸ் மேனிடம் அரிவாளை காட்டி மிரட்டி, அன்றைய விற்பனை பணமான ஒன்றரை லட்சத்தை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் புகார் அளிக்கவே, தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் டாஸ்மாக் மதுபான கடை பணியாளர்கள் இடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.