பிரிஜ் பூஷன் கொடுத்த அடுத்த ஷாக்... அதிர்ச்சியில் மல்யுத்த வீரர்கள் - பாஜக அரசு சொன்ன டிவிஸ்ட்...

Update: 2023-06-13 13:57 GMT

பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் எழுப்பியிருந்த விஷயம் நாடுமுழுவதும், அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. பிரிஜ் பூஷனை கைது செய்ய கோரி, ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்த மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம், பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது. வழக்கு விசாரணை ஜூன் 15-ற்குள் முடிக்கப்படும் எனவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கபப்டும் என்றும் அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில்தான் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த கூட்டமொன்றில் "சோக கவிதை வாசித்துள்ளார் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங்"....

"சில சமயம் கண்ணீர் சிந்த வேண்டும், சில சமயம் சோகமாக இருக்க வேண்டும், சில சமயங்களில் விஷத்தையும் குடிக்கவேண்டும். அப்போதுதான், சமூகத்தில் வாழ முடியும்" என்னும் அரத்தத்தில் அந்த கவிதை வரிகள் அமைந்திருந்தது. மேடையில் உணர்ச்சி பொங்க பேசிய அவர், "பிரபலம் அடைவதற்கே என்னை பற்றி தவறாக பேசுகிறார்கள், இது என் அன்புக்கு கிடைத்த வெகுமதி".... என்று மல்யுத்த வீராங்கனைகளின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக வார்த்தை தாக்குதல் நடத்தினார் பிரிஜ் பூஷன்...

ஜூன் 15-க்குள் பாலியல் வழக்கின் மீதான விசாரணை முடிக்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சர் உறுதியளித்திருக்கும் நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் கைசர்கஞ்ச் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெருவேன் என பிரிஜ் பூஷன் சிங் தெரிவித்தார். பாலியல் வழக்கின் விசாரணை விரைந்து முடிப்பதாக கூறியுள்ள நிலையில்,பிரிஜ் பூசன் கவிதை வாசித்து, அடுத்த முறையும் தேர்தலில் போட்டியிடுவேன் என கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்