"வீட்லயே வெச்சுக்க சொல்லிட்டாங்க ஸ்கூல்ல" மகளை தூக்கிச் சென்று தேர்வெழுத வைத்த தாய்.. பெற்ற வயிற்றில் பாலை வார்த்த மாற்றுத்திறனாளி மகள்

Update: 2023-05-20 07:51 GMT

நடக்க முடியாத மாற்றுத்திறனாளி மகளை தாய் தூக்கிச் சென்று 10ம் வகுப்பு தேர்வெழுத வைத்த நிலையில், அந்த மாணவி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்மிளா என்ற மாற்றுத்திறனாளி மாணவி பயின்று வருகிறார். நடக்க இயலாத சர்மிளாவை அவரது தாய் புவனேஸ்வரி தன் தோளில் சுமந்து சென்று பொதுத் தேர்வுகளை எழுத வைத்தார். இந்நிலையில், நேற்று வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 235 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி சர்மிளாவுக்கு குடும்பத்தினர் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நடக்க முடியாத காரணத்தால் வீட்டில் இருந்தே படித்த போதிலும், சர்மிளா தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அரசு மனது வைத்தால் தன் மகள் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வாள் என சர்மிளாவின் தாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்